25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
சினிமா

அந்த செய்தி கேட்டு, உயிர் நண்பனுக்காக ஓடோடி வந்த விஜய்….

அந்த செய்தி கேட்டு, உயிர் நண்பனுக்காக ஓடோடி வந்த விஜய்….

உறவுக்காரன் எவனும் உதவ மாட்டான், எனக்கு என் நண்பன் இருக்கான் என்று மார்தட்டுபவர்கள் பலர். நண்பர்கள் தினம் அன்று பலரும் தங்கள் உயிர் நண்பனை பற்றி சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா ரசிகர்களோ நடிகர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு விஜய் செய்த காரியம் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சஞ்சீவும், விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

கடந்த ஆண்டு சஞ்சீவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் போன்று இருந்திருக்கிறது. இதனால் கலக்கம் அடைந்த சஞ்சீவ் தன் மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் தனியாக இருந்தார்.

அப்பொழுது விஜய் போன் போட சஞ்சீவ் நடந்ததை கூறியிருக்கிறார். வீட்டில் தனியாவா இருக்க, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ என்று விஜய் கேட்டிருக்கிறார். போனை வைத்த 15வது நிமிடத்தில் விஜய் உணவுடன் சஞ்சீவ் வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கிறார்.

கொரோனா போன்று அறிகுறிகள் இருந்ததால் சஞ்சீவ் விஜய்யை சந்திக்கவில்லை. இதையடுத்து சஞ்சீவ் வீட்டு காவலாளியிடம் உணவை கொடுத்துவிட்டு சென்றார் விஜய்.

தமிழ் திரையுலகம் கொண்டாடும் ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் நண்பர்களை பொறுத்தவரை, தான் எப்பொழுதுமே சாதாரண ஆள் என்பதை நிரூபித்துவிட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால் யாரிடமாவது சாப்பாட்டை கொடுத்து அனுப்பியிருக்க முடியும். ஆனால் தானே வந்ததில் தான் தனித்து நிற்கிறார் விஜய் என்று இந்த நண்பர்கள் தினத்தில் ரசிகர்கள் பெருமையாக பேசுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment