அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்:

Date:

அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்:
வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் தல 61 படத்தை போனி கபூர் இல்லை மாறாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.

நேர்கொண்ட பார்வை, வலிமையை அடுத்து தல 61 படத்தையும் ஹெச். வினோத் தான் இயக்கவிருக்கிறார். அஜித், வினோத் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் படத்தை போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்று தகவல் வெளியானது. போனி கபூரா என்று அஜித் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்நிலையில் தான் அவர்கள் மகிழ்ச்சி அடையும் செய்தி கிடைத்திருக்கிறது.

அஜித்
தல 61 படத்தை போனி கபூர் தயாரிக்கவில்லையாம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல 61 படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. படத்தை சீக்கிரமே ஷூட் செய்து முடிக்கப் போகிறாராம் வினோத்.

போனி கபூர்
வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூர் இரண்டு ஆண்டுகளாக அப்டேட் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் போனி கபூர் ட்விட்டர் பக்கம் வந்தபோது எல்லாம் அப்டேட் கேட்டார்கள். அவர் கண்டுகொள்ளாததை அடுத்து யார், யாரிடமோ எல்லாம் அப்டேட் கேட்டார்கள். தல தயவு செய்து இனி போனி கபூர் தயாரிப்பில் மட்டும் நடிக்காதீர்கள் என்றார்கள் ரசிகர்கள். இந்நிலையில் அவர்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது.

விஸ்வாசம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் தயாரித்தது. அதனால் தல 61 படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்தால் அப்டேட் கேட்டு கெஞ்ச வேண்டியதில்லை என்று அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வலிமை படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சியை படமாக்க 5 நாட்கள் தேவையாம். அந்த 5 நாட்களுக்கு பிறகு ரிலீஸ் தேதியை அறிவிப்பார்களாம்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்