கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவின் ஆண் நண்பரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அவரோ யாஷிகா பார்ட்டியில் இருந்து இல்லை மாறாக உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியதாக கூறியிருக்கிறார்.
நடிகை யாஷிகா ஆனந்த் தன் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த பவானி, செய்யது, அமீர் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சென்று பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு கடந்த 24ம் தேதி இரவு காரில் சென்னை திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது யாஷிகா ஓட்டி வந்த கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பவானி பலியானார்.
யாஷிகா குடிபோதையில் கார் ஓட்டவில்லை. யாஷிகா சாப்பிட்டுவிட்டு கார் ஓட்டியதாகத் தான் அவரின் நண்பர் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் அதிவேகமாக கார் ஓட்டி உயிர் பலி ஏற்பட காரணமாக இருந்ததற்காக யாஷிகா கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.




