Yashika ஆபரேஷன் சக்சஸ்.

Date:

ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு வந்த யாஷிகா!

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு அவர் நலமாக இருக்கிறார்.

யாஷிகா தன் தோழி பவானி, செய்யது, அமீருடன் கடந்த சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சூளேரிக்காடு பகுதியில் வந்தபோது அவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இடுப்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கள் செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யாஷிகாவை நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளனர்.

காரை யாஷிகா அதிவேகமாக ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனைக்கு சென்று யாஷிகாவிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகு அவரின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.

அமெரிக்காவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பவானி தன் தோழி யாஷிகாவை பார்க்க சென்னைக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் கார் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார். யாஷிகா கண் விழித்ததுமே பவானியை பற்றி தான் கேட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாலும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாலும் பவானி பற்றிய உண்மையை அவரிடம் சொல்லவில்லை. மாறாக பவானி க்ரிட்டிகலாக இருக்கிறார் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்