இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூ வழங்கும் பணி நவம்பர் 1 ஆம் திகதி தொடங்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்கள சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக வழங்கக்கூடிய இரண்டு மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்கள் சுகாதார அமைச்சின் வசம் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை நிறைவு செய்வதற்காக மேலும் 14.5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளுக்கான ஓர்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை கல்வித் துறையில் பல பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர், இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1