மட்டக்களப்பில் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நிமைனவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட 10 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே18ம் ஆம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று (27) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் மூத்த சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் கே.சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்ட (10) பேர் சார்பாக முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 09.08.2021 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொலிசாரால் இன்று எவ்விதமான அறிக்கை மற்றும் அடையாளங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அத்தோடு பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்