26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கு பிரதம செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு: த.தே.கூட்டமைப்பின் வடக்கு எம்.பிக்கள், தவிசாளர்கள் நாளை ஒன்றுகூடுகிறார்கள்!

வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற தலைவர்களும் ஒன்றுகூடுகின்றனர்.

வடமாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியை ஏற்றுக்கொண்டார்.

வடக்கு மாகாணசபை பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வடக்கில் தகுதியான- தற்போது நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளரை விட சேவை மூப்புள்ள 12 தமிழ் அதிகாரிகள் இருக்கும் நிலையில்- அவர்களை புறமொதுக்கி தற்போது பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டமை, அரசியல் நோக்கமுடையது என பரவலான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதம செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இது குறித்து ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைக்கவுள்ளார்.

அத்துடன், வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் நாளை (27) ஒன்றுகூடவுள்ளனர்.

நாளை மாலை 3 மணிக்கு கிளிநொச்சி, கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் இந்த ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

east tamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

Leave a Comment