25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

துனிசியா ஆர்ப்பாட்டங்களின் எதிரொலி: பிரதமர் நீக்கம்; நாடாளுமன்றம் முடக்கம்!

துனிசியாவின் பிரதமர் ஹிச்சாம் மெச்சிச்சியை தனது பதவியில் இருந்து நீக்குவதற்கும்,  பாராளுமன்றத்தை முடக்குவதற்கும், அனைத்து பிரதிநிதிகளின் பாராளுமன்ற சிறப்புரிமையை நிறுத்துவதற்கும், துனிசியாவின் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

துனிசியாவின் பல நகரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவிற்கு ஜனாதிபதி வந்துள்ளார்.

ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை துனீசிய இஸ்லாமியக் கட்சியான என்னாடாவின் தலைமையகத்தை டோஜூர், கைரூவான் மற்றும் சூஸ்ஸில் பகுதி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதால் கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது. பல துனிசிய பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கவச வாகனத்தை எரித்தனர்.

2011 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கத் தவறியதால் நாட்டின் மோசமான பொருளாதார, சமூக மற்றும் சுகாதார நிலைமைகளுக்கு  என்னாடா கட்சி பொறுப்பேற்க வேண்டுமென துனிசியர்கள் வலியுறுத்துகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஈரானின் ஏவுகணை எரிபொருள் உற்பத்தியை குறைத்த இஸ்ரேல் தாக்குதல்

Pagetamil

இந்தியத் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர தொடர் பேச்சு!

Pagetamil

Leave a Comment