மாஸ்டர் பவானியாக நடிக்க முடியவில்லை என கவலைப்படும் நடிகர்

Date:

படத்தில் வில்லன் காதாப்பாத்திரமே கவர்ந்தது

படத்தை பார்த்த அனைவரையும் கவர்ந்தவர் வில்லன் பவானி தான். முன்னதாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் வெளியானபோது இவருக்கு ஏதாவது ஆகிட்டா என்று ரசிகர்கள் கேட்டனர். படத்தை பார்த்த பிறகே விஜய் சேதுபதி ஏன் வில்லனாக மாறினார் என்பது புரிந்தது.

விஜய் தான் ஹீரோ என்றாலும் மாஸ்டர் விஜய் சேதுபதி படம் என்று விமர்சனம் எழுந்தது. வில்லன் கதாபாத்திரத்தை பார்த்துப் பார்த்து உருவாக்கிய லோகேஷ், ஹீரோவுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த பவானி கதாபாத்திரத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று ஆர்.கே. சுரேஷ் ஃபீல் செய்திருக்கிறார். தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு வந்த ஆர்.கே. சுரேஷ் பின்னர் நடிகர் ஆனார். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஹீரோவாகிவிட்டார். அவர் ஹீரோவாக நடித்த வேட்டை நாய் படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

பவானி கதாபாத்திரம் குறித்து ஆர்.கே. சுரேஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

நான் வில்லனாக நடிப்பதை மிஸ் பண்ணுகிறேன். அதிலும் குறிப்பாக மாஸ்டர் படத்தில் வந்த பவானி கதாபாத்திரத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தமாக உள்ளது.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு யாரும் என்னை அணுகவில்லை. இருந்தாலும் பவானியை மிஸ் பண்ணிவிட்டோமே என்று தூக்கமே வரவில்லை. அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பொருத்தமானது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்