ஆண் நண்பர்களுடன் செல்போனில் அரட்டையடித்த மகள்… தலையில் கல்லை போட்டு கொன்ற தாய்!

Date:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த கணுவாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவருடைய கணவர் சரவணக்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து குழந்தைகளுடன் தாய் நாகமணி வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நதியா ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து செல்போனியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நதியாவுக்கும் அவருடைய தாயார் நாகமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நாகமணி தூங்கி கொண்டிருந்த நதியா தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்