இலங்கைக்கு கடத்தவிருந்த மஞ்சள் மூட்டைகள் மீட்பு!

Date:

தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக உலர்ந்த சமையல் மஞ்சள் முடைகள் கடத்த இருப்பதாக மண்டபம் மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன் போது வேதாளை மீன் பிடி துறைமுகம் கடலில் பதிவு எண் இல்லாத சந்தேகத்திற்கு இடமான முறையில் நாட்டு படகு ஒன்று நின்றுள்ளது.

அந்த படகை நோக்கி மெரைன் பொலிஸார் கடலில் செல்லும் ஸ்கூட்டரில் சென்ற போது பொலிஸ் வருவதை கண்டு படகில் இருந்த நபர்கள் கடலில் குதித்து தப்பி ஓடினர்.

பின்னர் மெரைன் பொலிஸார் நாட்டு படகில் ஏறி சோதனை செய்த போது படகிற்குள் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக சமையல் மஞ்சள் இருந்தது தெரியவந்தது.

இதனனயடுத்து நாட்டு படகுடன், சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் பொலிஸார் மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகளை எடையிட்டு பார்த்த போது மொத்தமாக 1350 கிலோ இருந்தமை தெரி யவந்தது.

இதனையடுத்து மஞ்சள் மூட்டைகளையும், நாட்டு படகையும் மெரைன் பொலிஸார் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் குறித்து மெரைன் பொலிஸார் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டிணம், சீனியப்ப தர்ஹா, சுந்தரமடையான், வேதாளை, தோப்புக்காடு கிராமங்களில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத்...

துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

வெள்ளவத்தையில் உள்ள ஹவ்லொக் வீட்டுவசதி வளாகத்தில் காவல்துறையினரால் ரி-56 ரக துப்பாக்கி...

யாழ் நகரில் யாசகர்கள் அகற்றப்பட்டனர்

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்