பயணிகள் சிலர் மாஸ்க் போட மறுத்ததால் விமானத்தை கேன்சல் செய்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்… என்ன நடந்தது?

Date:

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து பாகமாஸ் மாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று செல்ல திட்டமிடப்பட்டருந்தது. அதில் செல்ல பயணிகள் பலர் டிக்கெட் புக் செய்திருந்தனர். இந்நிலையில் விமானம் கிளம்ப தயாரானது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்திற்கு ஏற துவங்கினர். அப்பொழுது 17-18 வயதிற்குட்பட்ட சில
இளைஞர்கள் குழுவாக அந்த விமானத்தில் ஏறினர்.

அவர்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை. விமானப்பணி பெண்கள் பலர் கூறியும் இவர்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை. விமான நிறுவனத்தின் விதிமுறைகளின் படி பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். இந்த இளைஞர்களை விமான நிறுவன ஊழியர்கள், சக பயணிகள் என எல்லோரும் கேட்டுக்கொண்ட பிறகும் இவர்கள் மாஸ்க் அணிய மறுத்துவிட்டனர். இதனால் மற்ற பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த விமான நிறுவனம் குறிப்பிட்ட விமானத்தின் பயணத்தை ரத்து செய்தது.

அதன்பின் மற்ற பயணிகளை ஒரு விமானத்திலும் இந்த மாஸ்க் அணிய மறுத்த பயணிகளை வேறு விமானத்திலும் கூட்டி செல்ல திட்டமிட்டது. அதற்காக உடனடியாக அவர்கள் மற்ற பயணிகளுக்கான விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த மாஸ்க் அணிய மறுத்த இளைஞர் கூட்டத்திடம் விமான நிறுவனம் மறுநாள் தான் அவர்களுக்கான விமானம் இருக்கிறது. அதுவரை அவர்கள் ஓட்டல் ஒன்றில் தங்க கூப்பன்களை வழங்கியது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதை கடக்காததால் அவர்கள் தங்க ஓட்டல் விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இவர்கள் விமான நிலையத்திலேயே இரவு பொழுதை கழிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

spot_imgspot_img

More like this
Related

யாழில். பெண் படுகொலை – தடயவியல் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின்...

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்