யாழிலும் தென்னை நடும் திட்டம்!

Date:

எழுதுமட்டுவாளில் தென்னை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

அரசினால் நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நடும் வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்தில் வெற்றி காணிகளில் தென்னை மரக்கன்று நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எழுதுமட்டுவாளில் உள்ள யாழ் ஆயருக்கு சொந்தமான காணியில் 700 தென்னை மரங்களை நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் மாவட்ட கியூடெக் நிறுவனத்தின் தலைவர் யூயின் பிரான்சிஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னை பனை மற்றும் ரப்பர் செய்கை மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவினால் குறித்த தென்னை மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்றைய தினம் எழுதுமட்டுவாளில் யாழ் ஆயருக்கு சொந்தமான காணியில் மரக்கன்றுகள்நாட்டி வைக்கப்பட்டது.

இராணுவத்தில் 52வது காலாட் படைத்தலைமையக இராணுவத்தினரினால் குறித்த 700 மரக்கன்றுகள் நடும் பணிகள் இடம்பெறவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்