திண்டுக்கல் லியோனிக்கு முக்கிய பதவி; கஸ்தூரி கடும் விமர்சனம்!

Date:

திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்க பட்டு இருக்கிறார். அதை நடிகை கஸ்தூரி ட்விட்டரில் விமர்சித்து இருக்கிறார்.

ஆசிரியர், பேச்சாளர், சீரியல் நடிகர், பட்டிமன்ற நடுவர் என பல திறமைகள் கொண்டவர் திண்டுக்கல் லியோனி. அவர் பட்டிமன்றத்தை டிவியில் ரசித்து பார்க்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது.

திண்டுக்கல் ஐ. லியோனி தற்போது ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த தொடரில் அவர் தேவயானியின் மாமனாராக நடிக்கிறார். வயதானாலும் எப்போதும் மற்றவர்களை எதோ ஒரு காரணத்திற்காக திட்டிக்கொண்டே இருக்கும் சிடுமூஞ்சி தாத்தாவாக தான் லியோனி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது திண்டுக்கல் ஐ. லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அது பற்றிய அரசாணை இன்று வெளியாகி உள்ளது.

இதை பார்த்த நடிகை கஸ்தூரி ட்விட்டரில் அதை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். “தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ.லியோனி நியமனம்.சபாஷ். இதை விட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா. Dindugal Leoni appointed head of TN textbooks and educational services corpn. Can we expect lessons on DMK ‘history’ DK ‘social studies’, movie ‘numbers’ and womens ‘figures’ ?! ” என கஸ்தூரி தெரிவித்து உள்ளார்.

பெண்கள் figure பற்றி லியோனி கூறி இருந்த கருத்து சில மாதங்களுக்கு முன் சர்ச்சை ஆகி இருந்த நிலையில் அதை குறிப்பிட்டு கஸ்தூரி இப்படி விமர்சித்து இருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்