‘சுவிஸ் காசுக்கு கூலிப்படையாக இயங்கினோம்’: முல்லைத்தீவில் தாக்குதல் நடத்திய யாழ் ரௌடிகள் ‘பகீர்’ தகவல்!

Date:

முல்லைத்தீவு, செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வாளினால் வெட்டி, வீட்டில் நின்ற காருக்கு தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 ரௌடிகள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான ரௌடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் இருக்கும் ஆவா குழு ரௌடி ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி கள்ளப்பாட்டுப் பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்கள் இரண்டு மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நவாலியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் சம்பவம் தொடர்பில் ஒப்புக்கொண்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் 6 பேரும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்றிரவு முற்படுத்தப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்