இந்தியாவுக்கு எதிரான தொடரில் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக சகலதுறை வீரர் தசுன் ஷானக தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்தின் போது குசலின் தலைமையை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பாராட்டியுள்ள சமயத்தில், இந்த செய்தி வந்துள்ளது.
குசல் பெரேராவின் தலைமையில் 6 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் இலங்கை ஆடி, ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்தது. இதனால் தசுன் சானகவை தலைவராக்கலாமென இலங்கை கிரிக்கெட் ஆலோசித்து வருகிறது.
குசலின் கப்டன் பதவி ஒரு நிரந்தர நியமனம் அல்ல, ஆனால் ஒரு சோதனை என்று பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு முன்னர் தலைமை தேர்வாளர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், தசுன் ஷானக, தேசிய அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றவர். 2019 ல் இளம் அணியாக பாகிஸ்தானிற்கு சென்று, வலுவான பாகிஸ்தானை வெள்ளையடித்த இலங்கை அணியை தசுனே வழிநடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




