தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புதிய டிரண்டுகளை அறிமுகப்படுத்தியவர் நடிகர் சிம்பு. நாயகனாக நடிக்க ஆரம்பித்த சில படங்களிலேயே பெரிய நடிகர்களுக்கு இணையாக வரவேற்பு பெற்றார்.
நடிப்பு மட்டுமில்லாது இயக்கம், பாடுவது, பாடல் எழுதுவது என பல விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி இருந்தார். இதையெல்லாம் தாண்டி சிம்புவின் நடனத்திற்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இடையில் பல பிரச்சனைகள், சர்ச்சைகளை சந்தித்த STR இப்போது புதிய ரூட்டில் பயணித்து வருகிறார். அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வர ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்ற அவர் தற்போது ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
உடல் எடை குறைத்து பழைய யங் லுக்கில் மாறியிருக்கும் இந்த சிம்புவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சினிமாவில் கலக்கும் STRயின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 150 கோடிக்கு மேல் இருக்கும் என்கின்றனர்.