இந்தியா மீது விதித்த பயண தடையை நீக்கியது ஜேர்மனி அரசு!

Date:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலால் நாடு முழுவதும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது.

இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்தன.

இதற்கிடையே, இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளில் டெல்டா வகை கொரோனா அதிகம் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த நாடுகளுடனான விமான சேவைக்கு ஜேர்மனி அரசு தற்காலிக தடை விதித்தது.

இந்நிலையில், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளதாக ஜேர்மனி நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்