அழிந்து போனதாக கருதப்பட்ட பறவை 170 வருடங்களின் பின் தென்பட்டது!

Date:

அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு நிற கண்கள் கொண்ட பப்லர் பறவை, 170 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்தோனேஷியாவில் தென்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில் 170 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு கண்களை கொண்ட பப்லர் பறவை இனம் வாழ்ந்த வந்தது. கடைசியாக 1848 ஆம் ஆண்டு காணப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்ட இந்த பறவை, அதன் பின் யார் கண்ணிலும் படவில்லை. அதனை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதனால் அந்த பறவையினம் அழிந்து போனதாக கருதப்பட்டது. அழிந்து போன பறவையினங்களில் அதுவும் பட்டியல்ப்படுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு போர்னியோவின் மழைக்காடுகளில் இந்த பறவையினம் மீள கண்டறியப்பட்டுள்ளது.

முஹம்மது சுரான்டோ மற்றும் முஹம்மது ரிஸ்கி என்ற இருவர் காட்டுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, வித்தியாசமான பறவையினம் என கருதி அதை பிடித்து படம் எடுத்து விட்டு பறக்க விட்டுள்ளனர். எனினும், அது பப்லர் பறவையென்பது அவர்களிற்கு தெரியாது.

அந்த புகைப்படம் வெளியாகி, அது பறவை கண்காணிப்பு குழுவின் கண்ணில் பட்டபின்னர்தான், அந்த பறவை பற்றிய தகவல் வெளியானது.

“இது போன்ற கண்டுபிடிப்புகள் நம்பமுடியாதவை. பல தசாப்தங்களாக அல்லது அதற்கு மேலாக காணாமல் போன பிற உயிரினங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’’ என உலக வனவிலங்கு பாதுகாப்புஅமைப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்