மேலே மணல்… உள்ளே?: யாழ்ப்பாணம் வந்த டிப்பர் சிக்கியது!

Date:

மணலுக்குள் புதைந்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பல லட்சம்
பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் போலீசாரால் மீட்பு

மணலுக்கு புதைத்து இரகசியமான முறையில் யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்
செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பளை பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச் சம்பவம் நேற்று( ஞாயிறு) இடம்பெற்றுள்ளது.

சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பளை
பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க பச்சிலைப்பள்ளி
பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் பளை விசேட பரிசோதனை
மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மாங்குளம் பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர்
வாகனம் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்தியபோது சூட்சுமமான முறையில் முதிரை
மரக்குற்றிகளுக்கு மேல் மணல்களை ஏற்றி சென்றது கண்டறியப்பட்டது. வாகனத்துடன்
சாரதி கைது செய்யப்பட்டதாக பளை பொலீசார் தெரிவித்தனர்.

இதன்போது 26 முதிரை குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த முதிரை
குற்றிகள் பல லட்சம் பெறுமதி மிக்கவை என பளை போலீசார் தெரிவித்தனர்
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்