யாழில் விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய ‘நட்புக்கள்’ விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்!

Date:

அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நட்சத்திர விடுதியிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.

அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்