ரோஜா சீரியலில் அனு கதாப்பாத்திரத்தில் விஜே அக்ஷயா நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சின்னத்திரையில் சீரியல்கள் வருடக்கணக்கில் கூட ஓடும். ஒரு சில சீரியல்கள் பல சீசன்களாகவும் தொடர்ந்து பல வருடங்களுக்கு ஒடுவதுண்டு. அதனால் சீரியல் நடிகர்கள் அவ்வப்போது “அவருக்கு பதில் இவர்” என அறிவித்து நடிகர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சின்னத்திரை ரசிகர்களும் இது வழக்கமானது தானே என போகிற போக்கில் ஏற்றுக்கொள்வார்கள்.
அப்படி ஒரு மாற்றம் தான் தற்போது சன் டிவியின் டாப் சீரியலான ரோஜா தொடரில் நடைபெற்று உள்ளது. ரோஜா சீரியலில் வில்லி அனு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஷாமிலி கர்ப்பமாக இருந்ததால் சமீபத்தில் அதில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக தற்போது அனு கதாப்பாத்திரத்தில் பிரபல சன் மியூசிக் விஜே அக்ஷயா நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் நடித்துள்ள காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. அக்ஷயாவை சன் மியூசிக் மட்டுமின்றி சன் டிவியின் வணக்கம் தமிழா ஷோவில் கூட ரசிகர்கள் அதிகம் பார்த்திருப்பார்கள்.
தொகுப்பாளராக ரசிகர்களை கவர்ந்த அக்ஷயா நடிகையாக சின்னத்திரை ரசிகர்களை கவர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.