சென்.கிளயார் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல்

Date:

தலவாக்கலை – சென்.கிளயார் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர்வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

தலவாக்கலை – சென்.கிளயார் வனப்பகுதி நேற்று (28) இரவு 7 மணி முதல் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.

எனினும், தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தீ வேகமாக பரவி சுமார் 30 ஏக்கர் வரை தீக்கிரையானது.

மனித செயற்பாடு மூலமே இத்தீப்பரவல் ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கும் பொலிஸார், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

க.கிஷாந்தன்

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்