Pagetamil
இலங்கை

யாழில் வீட்டிலிருந்து தமக்கு தாமே சிகிச்சையளிக்கும் தொற்றாளர்கள்: அரச அதிபர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதன் மூலம் இறப்புகளை தவிர்க்கலாம் எனயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது

எனவே பொதுமக்கள் கொரோனா நோய் அறிகுறி காணப்படுமிடத்து உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று நோய்க்குரிய சிகிச்சையினை பெறுமிடத்து உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

குறிப்பாக கடந்த மாதத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் பதிவாகின்றன எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் சற்று அவதானமாக செயற்பட வேண்டும்.

சிலர் கொரோனா தொற்று அறிகுறி காணப்படும் போது வீடுகளில் இருந்தவாறு தமக்கு சிகிச்சை அளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். எனினும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் சில பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. அதாவது நோய் தொற்றுக்கு உள்ளாகி நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது சில வேளைகளில் இறப்பு சம்பவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். அதாவது நோய் அறிகுறி காணப்படும் இடத்தில் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை முடிவினை பெற்றுவைத்திய ஆலோசனையைப் பெற்று செயற்படுவதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

நீரில் மூழ்கி சிறுவன் பலி

east tamil

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

east tamil

Leave a Comment