கடன் வேண்டாமென பயனாளியிடம் கடிதம் கோரியதாக குற்றச்சாட்டு: சமுர்த்தி உத்தியோகத்தர் விளக்கம்!

Date:

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஊரெழு மேற்கு கிராம சேவகர் பிரிவில் வீட்டு வீட்டு வியாபார நிலையங்களை விஸ்தரிப்போம் எனும் சமுர்த்தி மானிய கடன் பெறுவதற்கு தெரிவாகியிருந்த பயனாளி ஒருவரை, தனக்கு குறித்த மானிய கடன் திட்டம் வேண்டாம் என்று கடிதம் எழுதி தருமாறு குறித்த பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் கோரியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சமுர்த்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீட்டு வியாபார நிலையங்களை விஸ்தரிப்போம் எனும் மானிய கடன் வழங்கும் திட்டத்திற்கு யாழ் மாவட்டத்தில் பயனாளிகளின் பெயர்கள் தெரிவு செய்யப்படுகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரெழு மேற்கு கிராம சேவகர் பிரிவில் சுயதொழில் நோக்காக சிறிய வியாபார நிலையத்தை நீண்டகாலமாக வீட்டோடு நடத்தி வருகின்ற குடும்ப பெண் ஒருவர் உரிய தகுதிகளின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்னரேயே பயனாளியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பயனாளியை இன்றைய தினம் பயனாளியின் கணவரை அழைத்த சமுர்த்தி உத்தியோகத்தர் மானிய கடன் வேண்டாம் என கடிதம் எழுதி தருமாறு கேட்டதாக, தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர் கடிதம் வழங்க மறுப்பு தெரிவித்த போதும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர், மனைவியோடு கலந்தாலோசித்து கடன் வேண்டாம் என்ற கடிதத்தை வழங்குமாறு கேட்டுள்ளதாக பயனாளி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் பயனாளி கடிதம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, குறிப்பிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் தமிழ் பக்கத்துடன் தொடர்பு கொண்டு, அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு அந்த கடனை வழங்கும் நோக்கத்துடன், சம்பந்தப்பட்ட பயனாளியுடன் கலந்துரையாடல் ஒன்றையே நடத்தியதாகவும்,  அதில் அழுத்தம் எதுவும் பிரயோகிக்கவில்லையென்றும் தெரிவித்தார்.

சாதாரண கலந்துரையாடலை பயனாளி தவறாக அர்த்தப்படுத்தி விட்டார் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்