இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்திற்கு 5 ஏக்கர் புதிய காணி!

Date:

இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு தேவையான காணியினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமரின் இணைச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமானின் முயற்சியில் இன்று அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்துடனும் வேண்டுகோள் விடுத்ததற்கமைய 5 ஏக்கர் அளவிலான காணியினை பெற்றுக்கொடுக்க பலாங்கொடை பெருந்தோட்ட கம்பெனி இணக்கப்பாட்டினை வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக இரத்தினபுரி பிரதேசத்திற்கு பாரிய மழை வீழ்ச்சி பதிவான நிலையில், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்குள்ளானது.

அதனைத் தொடர்ந்த குறித்து பாடசாலையின் அதிபர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளுக்கு அறிவித்ததற்கமைய அவர், பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமான் மற்றும் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து பல தரப்பட்ட முயற்சிகளின் பலனாக இரத்தினபுரி புதிய நகரத்தினை அண்மித்த பாம்கார்டன் தோட்டத்தின் வெரழுப்ப பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து ஏக்கர் காணியினை பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி வெக்குனகொடவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளிடம் குறித்த காணியினை வழங்குவதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்