தமிழில் அறிமுகமாகும் வாரிசு நடிகை!

Date:

சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், கீர்த்தி சுரேஷ் போன்ற வாரிசு நடிகைகளின் வரிசையில் மேலும் ஒரு நடிகையும் தற்போது அறிமுகமாகி உள்ளார்.

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆகியோர் கதாநாயகிகளாகி உள்ளனர்.

இந்த வரிசையில் 1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகாவும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

அவர் தனது முதல் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஆர்.கார்த்திக் இயக்குகிறார். காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரீத்துவர்மா ஆகிய மேலும் 2 கதாநாயகிகளும் நடிக்க உள்ளனர். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்