பெண்கள் பல ஆண்களை மணக்க தென் ஆப்ரிக்க அரசு அனுமதி!

Date:

தென் ஆப்பிரிக்க அரசு பெண்கள் பல ஆண்களை மணக்க அனுமதி அளிக்க உள்ளது.ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இந்நாட்டில் ஒரே பாலின திருமணங்களையும், ஆண்கள் பலதார திருமணம் செய்து கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது. பாலின சமத்துவ ஆர்வலர்கள், பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இதை சட்டப்பூர்வமாக்கப்படுவது குறித்து தென் ஆப்ரிக்கா உள்துறை பாலிண்ட்ரி திட்டத்தை முன்மொழிந்து உள்ளது. இதற்கு நாட்டின் பழமை வாதிகள் மற்றும் சில மதக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆயினும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பாலிண்ட்ரி திட்டம் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திடடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மூசா மெசெலு செய்தியாளர்களிடம்”இது ஆப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும். அந்த பெண்களின் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? குழந்தைகள் அவர்கள் அடையாளத்தை எப்படி அறிந்து கொள்வார்கள்? ஒரு பெண் எப்போதும் ஆணின் ஆளுமையை எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆப்பிரிக்கக் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரெவரெண்ட் கென்னத் மெஷோ ”ஆண்கள் பலதார மணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை ஆகும். ஆயினும் ஒரு பெண்ணுக்குப் பல கணவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு பெண் பல கணவர்களுடன் இருக்க முடியாது, ஆண்கள் பொறாமை மற்றும் ஆதிக்க சக்தி உடையவர்கள்” எனக் கூறி உள்ளார்.

பல கணவர்களை ஒரு பெண் மணந்துகொள்ளும் பாலிண்ட்ரி சட்டம் குறித்து ஆய்வுகள் நடத்திய கல்வியாளர் பேராசிரியர் கொலிஸ் மச்சோகோ செய்தியாளர்களிடம் ”உண்மையான சமத்துவத்துக்கு ஆப்பிரிக்கச் சமூகங்கள் தயாராக இல்லை. நம்மால் கட்டுப்படுத்த முடியாத பெண்களை என்ன செய்வது என்று நமக்கு தெரியவில்லை” என கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்