ராமாயணத்தில் ராமர் வில்லை ஒடித்து சீதையை திருமணம் செய்ததை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் இன்றைய நடை முறையில் அப்படியாக வில்லை ஒடித்து திருமணம் செய்யும் நடைமுறை எந்த வழக்கத்திலும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் பீகாரில் நடந்த ஒரு திருமணம் ராமருக்கு நடந்த திருமணம் போன்றே நடந்துள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சபல்பூர் பகுதியில் உள்ள சோன்பூர் பிளாக் பகுதியில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது ராமாணயத்தில் எப்படி ராமருக்கும் சீதைக்கு திருமணம் நடக்குமோ அப்படியே நடந்தது. அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதலில் மணமகன் ஒரு வில்லை தன் இரு கைகளால் ஓடிக்கிறார். பின்னர் மேடைக்கு கீழே இருந்து வந்த மணமகள், மணமகனிற்கு மாலை அணிவித்து தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறார். மக்கள் எல்லோரும் அந்த புதுமண தம்பதியை பூக்கள் தூவி வாழ்த்தினர்.
பீகாரில் நடந்த இந்த திருமணம் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது உண்மையான ராமாயணம் போல நடந்த இந்த திருமணத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக பேசி வருகின்றனர். இந்த திருமணம் கொரோனா காலத்தில் நடந்திருந்தாலும், எந்த விதமான கொரோனா முன்னெச்சரிக்கையோ அல்லது பாதுகாப்பு நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. மேடையில் இருப்பவர்கள் மாஸ்க் அணியவில்லை, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வில்லை. என குற்றச்சாட்டும் இந்நிகழ்வின் மீது எழுந்துள்ளது.