29.8 C
Jaffna
March 29, 2024
ஆன்மிகம்

குழந்தை பிறந்தவுடன் ஜாதக பலன் பார்ப்பது சரியா!

ஒவ்வொருவரின் வீட்டில் புது வசந்தத்தை கொண்டு வரக்கூடியது குழந்தை செல்வம். குழந்தையுடன் சிறிது நேரம் பேசி விளையாடினால், நம் மன குழப்பங்கள், மன அழுத்தங்கள் தீர்ந்துவிடும்.குழந்தை பிறந்ததும் நாம் பிறந்த நேரத்தை சரியாக குறித்து வைத்துக் கொள்வது அவசியம். அதை வைத்து ஜாதகத்தை கணித்துக் கொள்ளவும்.

ஒவ்வொருவரின் வீட்டில் புது வசந்தத்தை கொண்டு வரக்கூடியது குழந்தை செல்வம். குழந்தையுடன் சிறிது நேரம் பேசி விளையாடினால், நம் மன குழப்பங்கள், மன அழுத்தங்கள் தீர்ந்துவிடும். குழந்தை பிறந்ததும் நாம் பிறந்த நேரத்தை சரியாக குறித்து வைத்துக் கொள்வது அவசியம். அதை வைத்து ஜாதகத்தை கணித்துக் கொள்ளவும்.

குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியது :

குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் பெற்றோர், குடும்பத்தில் பெரியோர் குழந்தை பிறந்த நேரத்தை சரியாக குறித்து வைத்துக் கொண்டு நட்சத்திரத்தையும், ராசியை குறிக்கும் முறைப்படி ஜாதகம் எழுதக் கூடியவர்களிடம் கூறி ஜாதக குறிப்பை பெறவும். இந்த ஜாதக குறிப்பு குழந்தையின் வாழ்நாள் முழுவதும் மிக முக்கியமானது.

​குழந்தையின் ஜாதக பலன் எப்போது தொடங்கும் ?

ஜோதிட சாஸ்திரப்படி குழந்தை கருவில் இருக்கும் போதே, அதன் 3 மாதங்களிலிருந்து அந்த குழந்தைக்கான ஜாதக பலன் தொடங்கிவிடும் என்கிறது.

இதனால் தான் அரசர் காலத்தில் அரண்மனை ஜோதிடர் என எப்போதும் ஒருவர் அரசனுக்கு ஆலோசனை வழங்குவதற்கு இருப்பார். இவர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், போரில் வெற்றி பெற கணிப்பதோடு, எந்த சுப நேரத்தில் ராஜா – ராணி கூட வேண்டும் என்பதையும் கணித்துக் கூறுவார்.

பெற்றோருக்கு நல்ல தசாபுத்தி முக்கியம்

கணவன் – மனைவிக்கு நல்ல தசாபுத்தி நடக்கும் போது கரு தரித்தால் அந்த குழந்தையின் ஜாதகமும் மிக சிறப்பாக இருப்பதோடு, அவரின் பெற்றோருக்கும் சிறப்பான வாக்கையை தருவதாக அமையும்.

மாறாக சரியில்லாத தசாபுத்தி காலத்தில் கருத்தரித்தால், அந்த குழந்தை அடிக்கடி நோய் வாய்ப்படுவதோடு, அதன் வாழ்க்கை முழுவதும் தேவையற்ற துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்கிறது சாஸ்திரம்.

குழந்தை கருவுறும் போதே தொடங்கிவிடுவதால், சில பெற்றோருக்கு மனைவி கர்ப்ப காலத்திலேயே சொந்த வீடு வாங்குதல், உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் ஏற்படுதல் போன்ற நிகழ்வுகள் கூட நடக்கும்.

​எப்போது குழந்தையின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்?

குழந்தை பிறந்தவுடன் அதன் ஜாதகத்தைப் பார்ப்பது தவறு, குறைந்த பட்சம் குழந்தைக்கு 3 வயது பூர்த்தி ஆன பின்னரே ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்.

சில நேரங்களில் குழந்தை பிறந்தவுடன் குடும்பம், வேலை, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நேர்மாறாக துன்பத்தைக் கொடுக்கக்கூடிய ஜாதகமாக அமையலாம்.

அதனால் ஜாதகத்தைப் பார்த்து பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையேயான அன்பு குறைந்துவிட கூடாது என்பதற்காக பெரியவர்கள் இப்படி குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கான ராசி, நட்சத்திரம், குழந்தையின் ஆரோக்கியம், பெற்றோர், தாத்தா, பாட்டி, தாய்மாமன் ஆகியோரின் ஆரோக்கிய நிலையை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

​குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தை வைத்து கேட்க கூடாதது?

மேலே குறிப்பிட்ட கேட்க வேண்டிய விஷயங்களைத் தவிர அந்த குழந்தை உயர்கல்வி படிப்பானா, அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா, தனியார் உத்தியோகம் கிடைக்குமா அல்லது தொழில் செய்வானா? என கேட்பதும். அதையும் தாண்டி திருமணத்தில் தோஷம் ஏதேனும் உண்டா, குழந்தையின் ஜாதகம் சுத்த ஜாதகமா?

நல்ல கணவன் / மனைவி அமைவாரா, குழந்தை பாக்கியம் உண்டா, இந்த குழந்தை வளர்ந்து பெற்றோரையும், சகோதர, சகோதரிகளைக் கவனிப்பான போன்ற இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதை கண்டிப்பாகக் கேட்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான ஆர்வத்தால் இப்படிப்பட்ட கேள்வி கேட்பதால் குழந்தைக்கும், நமக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு, அக்கறை குறைந்துவிடும்.

​எப்போது குழந்தையின் ஜாதகத்தை காட்டலாம்?

குறைந்தபட்சம் குழந்தைக்கு 12 வயது பூர்த்தி அடைந்த பிறகு, குழந்தை எந்த கல்வியில் சிறந்து விளங்குவான்?. என்ன படிப்பு சரியாக இருக்கும். தொழில் அல்லது வேலை இதில் எதை தேர்ந்தெடுப்பான் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

அதே போல பிள்ளை வளர்ந்து மண வாழ்க்கைக்கு தயாராகும் போது 20 வயதுக்கு மேல், பிள்ளைக்கு செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், நாக தோஷம், திருமண கால தாமதம் குறித்து ஜாதகத்தை வைத்து பார்க்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: மீனம் ராசியினருக்கு எப்படி?

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: தனுசு ராசியினருக்கு எப்படி?

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: மகரம் ராசியினருக்கு எப்படி?

Pagetamil

புத்தாண்டு பலன்கள் 2024: கும்பம் ராசியினருக்கு எப்படி?

Pagetamil

Leave a Comment