பூமியின் மேற்பரப்பில் 70 சதவிகிதம் பகுதி தண்ணீரால் சூழப்பட்டிருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த இயற்கை தந்த வரமான பூமியில் 361,132,000 சதுர கி.மீ அளவை கடல்களே ஆக்கிரமித்துள்ளன.
பொதுவாக நாம் உலக வரைபடத்தைப் பார்க்கும்போது என்ன நினைப்போம். கடல்கள் எல்லாம் ஒன்றோடொன்று கலந்து இருக்கின்றன என்று தானே. ஆனால் இயற்கை என்றுமே நம்மை ஆச்சரியப்படுத்த தவறியதில்லை. ஆம், சில கடல்கள் சந்தித்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை. என்னதான் கடல்கள் எல்லாம் முற்றிலும் ஒரே கூறுகளால் அதாவது, H2O என்பதால் ஆகி இருந்தாலும் அவை அருகருகே சந்தித்தும் ஒன்றோடொன்று கலப்பதில்லை என்பது தெரிந்தால் உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும்.
உலகின் 2 மிகப்பெரிய பெருங்கடல்களான பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சந்திக்கும் இடமான தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் கேப் ஹார்ன் என அழைக்கப்படும் இடத்திற்கு நீங்கள் செல்ல நேர்ந்தால் இந்த அறிவியல் பூர்வமான அதிசயத்தை கண்குளிர கண்டுரசிக்க முடியும்.
என்ன அறிவியல் பூர்வமான அதிசயமா? ஆம், என்னதான் இயற்கையின் அரிய படைப்பாக இருந்தாலும் ஒரு முக்கியமான அறிவியல் காரணமே பசிபிக் பெருங்கடலும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு சுமார் 800 கிலோமீட்டர் வரை சந்தித்தும் கலக்காமல் இருக்கின்றன. இந்த பகுதி முழுவது டிரேக் பாஸேஜ் (Drake Passage) என்று அழைக்கப்படுகிறது.
விஷயம் என்னவென்றால், தண்ணீர் எல்லாம் ஒரே மூலக்கூறுகளில் ஆகியிருந்தாலும் அவற்றிலும் வித்தியாசம் உண்டு. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் வெவ்வேறு அளவிலான density அதாவது அடர்த்தி, வேதியியல் மாற்றங்கள், உப்புத்தன்மை மற்றும் பிற பண்புகளை கொண்டுள்ளன. இதனாலேயே இவ்விரு கடல்களும் கலப்பதில்லை. இவ்விரு கடல்களில் வண்ணங்களின் மூலமே இவற்றில் இருக்கும் வேறுபாட்டை நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும்.
வெவ்வேறு இயற்பியல் மற்றும் உயிரியல் பண்புகளைக் கொண்ட இரண்டு நீர்நிலைகளுக்கு இடையிலான எல்லைகள் ஓஷன் க்ளைன்ஸ் (Ocean Clines) என்று அழைக்கப்படுகின்றன. ஓஷன் க்ளைன்ஸில் மிகவும் அற்புதமான வகைகளில் ஒன்று ஹாலோக்ளைன்ஸ் (Haloclines) என்று அழைக்கப்படுகிறது.
கணிசமாக வேறுபட்ட உப்புத்தன்மை கொண்ட இரண்டு நீர்நிலைகள் ஒன்று சேரும்போது, நீரின் இயற்பியல் பண்புகள் வேறுபாடுவதால் இந்த ஹாலோக்ளைன் உருவாகிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் சந்திக்கும் இடத்தில் இந்த ஹாலோக்ளைனை தான் நாம் காண்கிறோம். இந்த நிகழ்வை பிரபல ஆய்வாளரான ஜாக் கௌஸ்டியோ அவர்கள் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் டீப் டைவிங் செய்தபோது கண்டறிந்தார்.
ஒரு பெருங்கடல் அல்லது கடலில் உள்ள நீர் மற்றொன்றை விட குறைந்தது 5 மடங்கு மெல்லியதாக இருக்கும்போது ஹாலோக்லைன்ஸ் தோன்றும். ஆனால் அடிப்படை இயற்பியல் விதிகளின்படி, மிகுந்த அடர்த்தியான திரவம் கீழேயும் அடர்த்தி குறைவான திரவம் மேலேயும் தானே இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். அதன் படி அட்லாண்டிக் பெருங்கடலின் மேல் தானே பசிபிக் பெருங்கடல் பாய்ந்தோட வேண்டும்?
இதற்கு பதிலும் இயற்பியலிலேயே இரண்டு விளைவுகளின் கலவையாக உண்டு. முதலாவதாக, அட்லாண்டிக் கடலுக்கும் பசிபிக் கடலுக்கும் இடையிலான அடர்த்தியின் வேறுபாடு அவற்றில் ஒன்று கீழே செல்லுமளவுக்கும் மற்றொன்று மேலே உயரும் அளவுக்கும் அதிகமாக இல்லை. இருப்பினும் அவை ஒன்றோடொன்று கலக்காமல் இருக்க போதுமானதாக இருக்கிறது. இது தான் முதல் காரணம்.
இரண்டாவது காரணம் inertia எனும் நிலைமம். கோரியோலிஸ் விசை (Coriolis Force) என்று அழைக்கப்படும் செயலாற்ற நிலையிலான சக்திகள் பொருளின் இயக்கத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் நீர்நிலைகளின் ஓட்டத்தின் திசை வேகம் வேறுபடுவதால் அவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை.
இரண்டு பெருங்கடல்களின் நீருக்கும் இடையிலான மற்றொரு முக்கியமான வேறுபாடு மூலக்கூறுகளின் இணைப்பின் வலிமை அல்லது மேற்பரப்பு இழுவிசை வலிமை. இரண்டு பெருங்கடல்களும் முற்றிலும் மாறுபட்ட மேற்பரப்பு இழுவிசை வலிமையைக் கொண்டுள்ளன என்பதாலும் அவை ஒன்றொன்று கலப்பதில்லை.