விஜய்க்கு நண்பனாகும் பிரபல காமெடி நடிகர்..

Date:

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் ஆக்ஷன் சரவெடியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. இந்த படத்தை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்ட உருவாக்கி வருகிறார் நெல்சன். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் தொடங்கிய படக்குழு, ஒரு பாடல் காட்சியை படமாக்கியது. இதையடுத்து 16 நாட்கள் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான பணிகளை வேகமாக செய்து வருகிறது. அடுத்த மாதம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கவுள்ள இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியை பதிவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் முழுக்க, முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகிறது. அனிரூத் இசையமைத்து வருவதால் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடிக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் யோகிபாபு நடிப்பது தெரிந்த விஷயம். ஆனால் இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தற்போது அது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய்யின் நண்பனாக யோகிபாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் சர்க்கார், பிகில் உட்பட சில படங்களில் விஜய்யுடன் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்