26.1 C
Jaffna
March 1, 2025
Pagetamil
உலகம்

சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்: புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

பூமிக்கும் மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனுக்கு எதிரே கடக்கையில் கொசு போல காட்சியளிக்கும் படத்தை நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.

பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் தாழ் வட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்நிலையம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையத்தின் படம் ஒன்றை சமீபத்தில் அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து எடுத்துள்ளனர். பிரம்மாண்ட மஞ்சள் ஆரஞ்சு வண்ண சூரியனுக்கு நடுவே கொசு போல சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட படத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர்.

அப்படத்தை 7 பிரேம்களாக எடுத்து நாசா தொகுத்து வழங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் விநாடிக்கு சுமார் 8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாகவும் நாசா கூறியுள்ளது. இப்புகைப்படம் எடுக்கப்பட்ட சமயத்தில் விண்வெளி வீரர்கள் ஷேன் கிம்பரோ மற்றும் தாமஸ் பெஸ்குவெட் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

ஸ்பேஸ்வாக் மூலம் அவர்கள் 6 மணி நேரம் 45 நிமிடங்கள் பணியாற்றி விண்வெளி நிலையத்திற்கு மின்சாரத்தை அதிகரிக்கும் சோலார் தகடுகளை பொருத்தியதாக கூறியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

Pagetamil

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலை சிறிய முன்னேற்றம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!