மாந்தை இலுப்பைகடவை பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு

Date:

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பறங்கிக்கமம் பகுதியை அண்டிய பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும் பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும் அபகரிக்கப்படுவதாகவும் பறங்கி கமத்தை சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

யுத்தம் காரணமாக பல முறை இடப்பெயர்வுகளை சந்தித்த தங்களுக்கு அரசாங்கத்தினால் விவசாயம் செய்வதற்கு என இரு ஏக்கர் விவசாய காணிகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு அதற்கு தாங்கள் விண்ணப்பித்ததாகவும் விண்ணப்பித்த தங்களுக்கு வரவில்லை எனவும் தங்கள் பிள்ளைக்கு வந்துள்ளதாகவும் ஆனால் பிள்ளை வயல் செய்யவோ தோட்டம் செய்யவோ இதுவரை காணி வழங்கப்படவில்லை எனவும் பறங்கி கமத்தை சேர்ந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

இது ஒரு புறம் இருக்க வயல் செய்ய காணி வழங்காவிட்டாலும் வாழ்வதற்கே தற்போது காணி இல்லாத நிலை உருவாகியுள்ளதாக பறங்கி கமம் மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் தங்கள் சொந்த பகுதியில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு எமது பகுதிக்கு அருகில் உள்ள காணிகளை வழங்குவதாகவும் இதனால் எங்கள் பிள்ளைகள் திருமணம் செய்து இருந்தும் பிள்ளைகள் இருந்தும் அவர்களுக்கு ஒரு காணியை பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்

அதே நேரம் இலுப்பைகடவை மற்றும் கள்ளியடி பகுதியில் சட்ட விரோதமாக பல ஏக்கர் காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் ஆதாரங்களுடன் மக்கள் குற்றம் சுமத்தி சுமத்துகின்றனர்

எனவே விரைவில் உரிய அதிகாரிகள் நிறுவனங்கள் தலையிட்டு காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

குறித்த காடழிப்பு மற்றும் காணி அபகரிப்பு தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரனிடம் வினவிய நிலையில் குறித்த காடுகள் அழிக்கப்படும் விடையம் தொடர்பாக வனவள திணைக்களமே கவனம் செலுத்த வேண்டும் எனவும் தாங்கள் கணிகளுக்கோ காடழிப்புக்கோ எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும் காடுகள் அழிக்கப்படும் இடங்களில் நபர்களை எச்சரித்தும் எச்சரிக்கை பதாதைகளை அழிக்கப்படும் இடங்களில் பிரதேச செயலகம் காட்சிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்