அசேல சம்பத் கைது!

Date:

நுகர்வோர் உரிமைகள் செயற்பாட்டாளர் அசேல சம்பத், பிலியந்தல பகுதியில் வைத்து நேற்று (25) இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் ஒரு வாகனத்தில் சிஐடி என கூறி, அடையாளம் தெரியாத 20 பேரால் அழைத்து செல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யூடியூப் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் விசாரணைகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்ஸ்ட்ரா செனொகா கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வந்து அதில் சில தரமற்ற திரவங்களை கலந்ததன் பின்னர் மக்களுக்கு செலுத்துவதாக அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்தி ஒன்றைப் பரப்பியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்