வடக்கின் இன்றைய பிசிஆர் முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 877 பேரின் PCR மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் 65 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ் மாவட்டத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர்,  காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர்,  யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேர், மானிப்பாய் வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பளை வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என, 46 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், முல்லைத்தீவு பொது வைத்தியாலையில் ஒருவர், வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் என, 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் ஒருவர், என, 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.

பலாலி படைத்தளத்தில் 2 பேர், முழங்காவில் கடற்படை தளத்தில் 7 பேர், பரந்தன் தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்