வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 1229 பேரின் PCR மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் 79 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ் மாவட்டத்தில், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 4 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 2 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 20 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகார பிரிவில் ஒருவர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 5 பேர், காநைகர் சுகாதார வைத்திய அதிகார பிரிவில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என 36 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 17 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தில், கர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர், யாழ் சிறைக்கைதிகள் 3 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.




