மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சயீத் வீட்டின் வெளியே குண்டுவெடிப்பு – 3 பேர் பலி!

Date:

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் திகதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் 166 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்தவர் ஹபீஸ் சயீத். இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் இணை நிறுவனர் மற்றும் ஜமாத் உத்த தவா அமைப்பின் நிறுவனர். இவரது வீடு, பாகிஸ்தானில் லாகூரில் ஜோஹார் டவுன் பகுதியில் உள்ளது.

இவரது வீட்டின் வெளியே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

இதில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். ஹபீஸ் சயீத், தற்போது லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...

மட்டக்களப்பில் சிக்கிய 56 வயது திருடன்

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்