யாழில் ஊரைக்கூட்டி திருமணம் செய்தவருக்கு ரூ.20,000 அபராதம்!

Date:

பண்டத்தரிப்பு பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திருமண நிகழ்வு நடந்த வழக்கில், மணமகனை கடுமையாக எச்சரித்த மல்லாகம் நீதிமன்றம், அவருக்கு 20,000 ரூபா அபராதம் விதித்தது.

சண்டிலிப்பாய் சுகதார வைத்திய அதிகாரி பிரிவில் பண்டத்தரிப்பு, பிரான்பற்றில் இந்த மாத ஆரம்பத்தில் திருமண நிகழ்வொன்று நடந்தது. தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்ப்படுத்துள்ள நிலையில், குடும்பத்தினரின் பங்கேற்புடன் வீட்டில் திருமணம் நடக்க சுகாதார பிரிவினர் அனுமதித்தனர்.

எனினும், ஊரைக்கூட்டி, மண்டபத்தில் திருமணம் நடந்தது.

இதையடுத்து நடவடிக்கையெடுத்த சுகாதார பிரிவினர், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 47 குடும்பங்களை தனிமைப்படுத்தினர்.

கடந்த 13ஆம் திகதி அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்த திருமண நிகழ்வு தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பயணத்தடை காலத்தில், சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மணமகனின் பெயர் குறிப்பிட்டே திருமண நிகழ்வு அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், அவரை பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மணமகனை கடுமையாக எச்சரித்த நீதிவான், இந்த குற்றத்திற்கு 6 மாதம் வரையான சிறைத்தண்டனை விதிக்கலாம் என குறிப்பிட்டு, 20,000 ரூபா அபராதம் விதித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மணமகனின் சகோதரன் வெளிநாடு சென்றுள்ளார். அவர் பற்றிய தகவல்களை சுகாதார பிரிவினருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...

கள்ளக்காதலை பெருமையடித்து திரிந்த செந்தூரன்: கடுப்பான கணவனின் விபரீத முடிவு!

நுரைச்சோலை, கரம்ப கார்மென்ட் வத்த பகுதியில், முறையற்ற உறவு தொடர்பான மோதல்...

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்