25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
சினிமா சின்னத்திரை

கடற்கரையில் நடனமாடி யோக செய்து அசத்தும் நடிகை ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படங்கள்!

ரசிகர்களின் கனவு கன்னியாகவும், இடுப்பழகியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். கடந்த 2015-ஆம் ஆண்டு ‘டம்மி டப்பாசு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். அதன்பிறகு ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை பெற்றார். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பிரபலமடையாத நடிகையாக இருந்த ரம்யாபாண்டியன், இடுப்பு தெரியுமளவுக்கு போட்டோஷூட் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் நெஞ்சை கொள்ளைக்கொண்டன. இதன்பிறகு இளைஞர்களின் பேவரெட் ஹீரோயினாக மாறினார் ரம்யா. இதையடுத்து பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக நுழைந்த அவர், ஆரம்பத்தில் அனைவரின் அன்பையும் பெற்றார். பின்னர் நிகழ்ச்சியின் கடைசி வரை இருந்த அவர் மீது நெகட்டிவ்வான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோன்று புதிய படங்களில் ரம்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் ஓரத்தில் யோகா செய்துக்கொண்டே நடனமாடும் புகைப்படங்களை ரம்யா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

Leave a Comment