இயக்குனர் சுசீந்திரன் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவியாக மக்கள் பலரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை பிரபலங்கள் பலர் தாமாக முன்வந்து லட்சம் முதல் கோடி வரை கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். தற்போது இயக்குனர் சுசீந்திரன் ஒன்லைன் இல் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி அதில் கிடைத்த தொகையான 5 லட்சத்தை உதயநிதியை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “அனைவருக்கும் வணக்கம், இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவிடும் எண்ணத்தில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஆன்லைன் இல் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தினேன். அதில் கலந்து கொண்டோர் வழங்கிய கட்டண தொகை மொத்தமாக ஐந்து இலட்சம் ( Rs . 5,00,000 ) ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.
இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி, மற்றும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த K.V. மோத்தி, மக்கள் தொடர்பாளர் திருமதி.ரேகா, அவர்களுக்கும் என் உதவியாளர்கள் வினோத், புவனேஷ், வைஷாலி அவர்களுக்கும், மற்றும் எங்களோடு துணையாக நின்ற தொழில்நுட்ப கலைஞர்கள் சரத் நிவாஸ், சரவணன், சூர்யா தேவன் அவர்களுக்கும் , முக்கியமாக இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்று அறியச்செய்த அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் , ஊடகத்துறை மற்றும் சமூக வலைதளத்தினருக்கும், எங்களுக்கு ஆதரவு தந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.