நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காஜல் அகர்வால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகையும் கூட. அவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இளம் நடிகைகளுக்கு இணையான மார்க்கெட்டுடன் வலம் வருகிறார்.
காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டு கணவருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் காஜல்.
இந்நிலையில் நேற்று காஜல் அகர்வால் தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவர் கௌதம் உடன் காஜல் கொண்டாடும் பிறந்தநாள் இது. தற்போது காஜல் அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் காஜலின் தங்கை நிஷா மற்றும் அவரது கணவர் கௌதம் என மூவரும் உற்சாகமாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
காஜல் தற்போது சிரஞ்சீவி உடன் ‘ஆச்சர்யா’ படத்தில் நடித்து வருகிறார். சில தமிழ் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.