ரூ.20,000 கோடிக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படுகிறது!

Date:

20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் 22ஆம் திகதி கூடும்போது, இந்த பிரேரணை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும்.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.5 சதவீதம்.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல் மற்றும் அதற்கு தேவையான ஏனைய விடயங்களை கொள்வனவு செய்வது, கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூகம் மற்றும் பொருளாதார துறைகளில் கவனம் செலுத்தி இந்த தொகையை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அந்த வாரத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகரினால் நாளை மறுதினம் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...

இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை

காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை...

திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினரான 'திலீபன்' என்றழைக்கப்படும் இராசையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்