கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயதானவர்களுக்கு இலவசமாக கோழி வழங்கப்படும் என இந்தோகேசிய உள்ளூர் அதிகாரிகள் அறிவித்தை தொடர்ந்து, அங்கு தடுப்பூசி செலுத்த பலர் குவிந்து வருகிறார்கள்.
மேற்கு ஜாவாவின் சியான்ஜூர் மாவட்டத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக இந்த இலவச அறிவிப்பு விடுக்கப்பட்டள்ளது.
வயதானவர்களிற்கான தடுப்பூசி திட்டத்தில் ஆரம்பத்தில் பலர் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். இணையத்தளத்தில் பரவும் தடுப்பூசி குறித்து ஏராளமான தவறான தகவல்களால் மக்கள் அச்சமடைந்திருந்தனர்.
கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் சுகாதார மையங்களுடன் இணைந்து இலவச கோழி திட்டத்தை போலீசார் தொடங்கினர்.
இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு,நாளாந்தம் 25 பேர் மட்டுமே தடுப்பூசி பெற தயாராக இருந்தனர். ஆனால் இப்போது, ஒரு நாளைக்கு 250 பேர் தடுப்பூசி பெற வருகின்றனர்.




