24.9 C
Jaffna
January 25, 2025
Pagetamil
விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ‘மாற்றுநாள்’ எவ்வாறு பயன்படுத்தப்படும்?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, மழையால் ஒருவேளை தடைபட்டால் ரிசர்வ் டே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தம்டன் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

ஐந்து நாட்களில் முடிவு கிடைக்காவிடில் ‘ரிசர்வ் டே (மாற்றுநாள்)’ ஒதுக்கப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்துள்ளது.

ரிசர்வ் டே ஒதுக்கப்படுவது போட்டியின் முதலிலேயே உறுதியாக கூற இயலாது. கடைசி நாளின் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.

ஒருநாளைக்கு சராசரியாக 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். வெளிச்சமின்மை, மோசமான வானிலை, மழை குறுக்கீடு காரணமான ஆட்டம் தடைபட்டால், அடுத்த நாள் தடைபட்ட ஓவர்கள் கூடுதலாக வீசும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதாவது 90 ஓவர்களுக்குப் பதில் 105 ஓவர்கள் வரை வீசப்படும். இவ்வாறு அடுத்த நாள் ஒதுக்கப்பட்டு, கடைசி நாளில் ஆட்டம் முடியாமல், ஓவர்கள் வீச வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் ‘ரிசர்வ் டே’ ஒதுக்கப்படும்.

நேற்றைய முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 90 ஓவர்கள் கூடுதலாக வீசப்பட வேண்டும். அடுத்த நான்கு நாட்களில் சராசரியாக கூடுதலாக 15 ஓவர்களில் வீசப்பட்டாலும், 60 ஒவர்கள் மட்டுமே வீச முடியும்.

இன்று தொடங்கும் இரண்டாம் நாள் ஆட்டம் 30 நிமிடம் முன்னதாகவே தொடக்கும். அடுத்த 3 நாட்களும் 30 நிமிடம் முன்னதாகவே தொடங்கும்.

இதனால் ஐந்து நாட்களில் போட்டி முடிவடையவில்லை என்றால், ரிசர்வ் டே கட்டாயமாக ஒதுக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment