24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இந்தியா

கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளின் வரிசையில் பச்சை பூஞ்சை!

கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளின் வரிசையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞருக்கு நாட்டில் முதல்முறையாக பச்சை பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்கள் ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

நாசி வழியாக மனித உடம்புக்குள் புகும் இந்த தொற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் கண்கள் வரை பரவி பார்வையை பறிப்பதோடு உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதை போலவே, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூஞ்சை தொற்றுகளும் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் ‘ஆஸ்பர்கில்லோசிஸ்’ எனப்படும், பச்சை நிற பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற இவர், சமீபத்தில் வீடு திரும்பினார். சில தினங்களிலேயே மூக்கு வழியாக கடுமையான ரத்துக் கசிவு ஏற்பட்டது.

கடுமையான காய்ச்சலும் இருந்தது. இவர், கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதிய டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், இவருக்கு பச்சை நிற பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நாட்டில் இந்த வகை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவராக இருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தொற்று, இளைஞரின் நுரையீரல், சுவாசப் பாதை, ரத்தம் ஆகியவற்றில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment