யாழ் நகர கழிவு நீர் வாய்க்காலில் இருந்து வெடிக்காத எறிகணையொன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள், நகரிலுள்ள கழிவு வாய்க்கால்களை சுத்தம் செய்து வருகிறார்கள். ஸ்ரான்லி வீதியிலுள்ள கழிவு வாய்க்காலை சுத்தம் செய்த போது, வெடிக்காத நிலையில் 120 மி.மி வகையை சேர்ந்ததென நம்பப்படும் எறிகணையொன்று மீட்கப்பட்டுள்ளது.




