ஹர்பஜன் சிங் – லொஸ்லியா கூட்டணியின் ‘ஃபிரண்ட்ஷிப்’- ஓடிடி வெளியீடு!

Date:

ஹர்பஜன் சிங் லொஸ்லியா இணைந்து நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபிரண்ட்ஷிப்’. இந்தப் படத்தின் மூலம் ஹர்பஜன் நடிகராகவும் தமிழிலும் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் பிக்பாஸ் லொஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் அர்ஜுன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. உதயகுமார் என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது தியேட்டர்கள் முடங்கியுள்ளதால் பல படங்கள் ஓடிடி முடிவைக் கையில் எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் ஃபிரண்ட்ஷிப் படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

பிரபல ஓடிடி தளத்துடன் பேச்சு வார்த்தை இறுதி கட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்