‘வலிமை’ படத்தில் அஜீத் நடிக்கும் கேரக்டர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
‘வலிமை’ படத்தில் அஜீத்துக்கு என்ன கேரக்டர் தெரியுமா ?.. வெளியானது சூப்பர் அப்டேட் !
நடிகர் அஜீத் அதிரடிக்காட்டப் போகும் திரைப்படம் ‘வலிமை’. எச். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் இயக்கவுள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார். இவர்களுடன் சுமித்ரா, ராஜ் அய்யப்பா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வரும் தீபாவளியையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கொரானாவை காரணம் காட்டி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் கொரானாவால் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் 3 சண்டை காட்சிகள் ஐதரபாத்திலும், இரண்டு சண்டைக்காட்சிகள் சென்னையில் நடைபெற்று முடித்துள்ளது. அதேநேரம் சில காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட இருந்த நிலையில், அங்கு ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை என கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் கொரானா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது ஊடரங்கு தளர்வு காரணமாக மீண்டும் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது. படத்தின் பணிகள் துவங்க உள்ளதால் அப்டேட் ஏதாவது வராதா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் அஜீத் போலீசாக நடிப்பது தெரிந்த விஷயம் என்றாலும், மற்றபடி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று படக்குழுவிலிருந்து கசிந்துள்ளது. அதன்படி அஜீத் ஈஸ்வரமூர்த்தி என்ற சிபிசிஐடி அதிகாரி வேடத்தில் நடித்து கலக்கியுள்ளார். இந்த கேரக்டரில் மாஸாக அஜீத் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.