நடிகை கரீனா கபூருக்கு எதிராக எழுந்து வரும் கருத்துக்கள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.ராமாயணக் கதையை சீதையின் கோணத்தில் இருந்து காண்பிக்குமாறு புதிய வரலாற்றுப் படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் அதில் நடிகை கரீனா கபூர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும் சீதா படத்தின் கதையை இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும், பாகுபலி படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளதாகவும், அலுக்கிக் தேசாய் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்தப் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளமாக கரீனா கேட்டதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக கரீனா தான் நடிக்கும் படங்களில் 6 முதல் 8 கோடி தான் சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க 12 கோடி கேட்டுள்ளது பலரைக் கோபமடையச் செய்துள்ளது.
எனவே இந்துக் கடவுளைப் பற்றி எடுக்கப்படும் படத்தில் நடிக்க அதிக தொகை கேட்டு இந்து மக்களின் மனதைப் புண்படுத்தியாக பலர் புகார் எழுப்பினர். #BoycottKareenaKapoor என்ற ஹாஸ்டாக் உருவாக்கி கரீனாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.
தற்போது மீண்டும் #KareenaKapoor என்ற ஹாஷ்டாக் உருவாக்கி பலர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தான் தற்போது பாலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.